கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப் படுவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிப்பதற்கான, அனைத்து செயல்களிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்ஸ்கிருதம் படித்து தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்புக்கு செல்ல முடியும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிவந் துள்ள இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருதத்துக்கு பதில், தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழக மாண வர்கள் படிக்க முடியாது என்று கூறியிருப்பதும் வேத னையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளி களில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம், இந்தி கட்டாயம், ஆனால், தமிழ் மொழி கட்டாயப் பாடமில்லை என்பது நெஞ்சை பதறவைக்கிறது. அதிமுக அரசு கேந்திரியக் கல்வி நிறுவனங்களில் தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருத திணிப்பை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்