பெட்ரோல் பங்கில் ரூ.32 ஆயிரம் பறிப்பு

By செய்திப்பிரிவு

திண்டிவனத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை யோரம் உள்ள பெட்ரோல் பங்கில்நேற்று அதிகாலை ஒரே பைக்கில் 3 நபர்கள் வந்தனர். அங்கிருந்த ஊழியர் சுரேஷ் என்பவரிடம் பெட்ரோல் போடும்படி கூறி உள்ளனர். 3 பேரில் ஒருவர் அங்கிருந்த கேஷியர் கேபினுக்கு சென்றார். மற்றொருவர் பெட்ரோல் பங்க் ஊழியர் சுரேஷ் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை பறித்தனர். கேஷியர் கேபினில் இருந்த செந்திலை கத்தியால் மிரட்டி ரூ. 2 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

திண்டிவனம் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், குரங்கு குல்லா அணிந்து வந்த 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்