மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூர், திருச்சி, பெரம் பலூரில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் மின் வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால், இணை மேலாண்மை இயக்குநர் வினித் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும். மின்வாரியப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக் கக் கூடாது. காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தலைவர் விஜயகுமார் தலைமையில் கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒருங்கி ணைப்பாளர் பால்ராஜ், சிறப்புத் தலைவர் பரமேஸ்வரன், இணைச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சியில்...

ரங்கம் மின் வாரிய அலுவ லகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு ஐக்கிய சங்க கோட்டச் செயலாளர் நெல்சன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்டத் தலைவர் பன்னீர்செல்வம், தொமுச கோட்டச் செயலாளர் அன்பழகன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் பேசினர்.

இதேபோல, மின் வாரிய மன்னார்புரம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம், தென்னூர் தலைமைப் பொறியாளர் அலுவலகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மின் வாரிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில்...

தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெரம்பலூர் நான்கு சாலை பகுதியிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங் கிணைப்பாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்