கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து 242 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் கடவூர் ஒன்றியச் செயலாளர் ஆ.கருப்பசாமி அளித்த மனு விவரம்: கடவூர் வட்டம் வாழ்வார்மங்கலம் ஊராட்சியில் இருந்த பொது குடிநீர் குழாய் இணைப்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டு, வீடுதோறும் தனி குடிநீர் இணைப்பு கட்டாயம் பெறவேண்டும் எனக்கூறி குடிநீர் இணைப்பு வழங்கினர்.
தற்போது, குடிநீர் இணைப்பு கட்டணமாக ரூ.3,600 வழங்க வேண்டும். இல்லாவிடில் இணைப்பை துண்டித்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். எவ்வித வருமானமும் இல்லாத ஏழை, எளிய மக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, ஏழைமக்களின் வசதிக்காக வாழ்வார்மங்கலத்தில் பொது குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago