பட்டா வழங்கக் கோரி கீழ குமரேசபுரம் மக்கள் மனு

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்து பொதுமக் களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

கூட்டத்தில், கீழ குமரேசபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், “கீழ குமரேசபுரம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க நில அளவையர்கள் மூலம் நிலங்கள் அளவீடு செய்யப்பட் டன. ஆனால், இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே, விரை வாக பட்டா வழங்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பெரிய சூரியூர் அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், “எங்கள் தெருவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கி ரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் பொதுச் செயலாளர் ஒ.முத்துவேல் தலைமையில் அளித்த மனுவில், “எங்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் மு.கண்ணபிரான் பாண்டியனைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட நாட்டு வெடி குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்