கண்களில் கருப்பு துணியை கட்டி தி.மலையில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

தி.மலையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட 160 அரசு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள 4.5 லட்சம் பணியிடங் களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் கடந்த 2-ம் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசு ஊழியர்களின் போராட்டம் 7-வது நாளாக நேற்றும் நீடித்தது. அண்ணா சிலை முன்பு நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு முழக்கமிட்டனர். அப்போது அவர்கள், அரசு ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அரசு ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 160 அரசு ஊழியர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்