காவலர்கள் துப்பாக்கி சுடும் போட்டி கடலூர் மாவட்ட அணி பல்வேறு பதக்கங்களை வென்றது

By செய்திப்பிரிவு

மாநில அளவிலான காவலர்கள் துப்பாக்கி சுடும் போட்டி கடலூர் மாவட்ட அணி பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றது.

காவல்துறையின் மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் எஸ்பி  அபிநவ் தலைமையில் வடக்கு மண்டல காவல்துறை அணியினர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

வடக்கு மண்டல அணி மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாவது இடத்தையும், துப்பாக்கி பிரிவு போட்டியில் முதலிடத்தையும் கார்பன் துப்பாக்கி பிரிவு போட்டியில் முதலிடத்தையும் பெற்று 3 கேடயம், 4 தங்க பதக்கம், 4 வெள்ளி பதக்கம், 4 வெண்கலம் பதக்கம் பெற்றனர்.

இதே போல் கடலூர் எஸ்பி  அபிநவ் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் ஆகியோர் இணைந்து கார்பன் துப்பாக்கி சுடும் பிரிவில் முதலிடம் பெற்று கேடயம் பெற்றனர்.

கடலூர் மாவட்ட அணி சார்பில் போட்டிகளில் பங்கேற்ற ஆயுதப்படை காவலர் வினோத்குமார் தனிநபர் கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் 2 தங்க பதக்கம், 1 வெள்ளி பதக்கம், 1 வெண்கலம் பதக்கம் பெற்றார். ரெட்டிச்சாவடி காவல் நிலையம் காவலர் ராஜகோபால் தனிநபர் இன்சாஸ் துப்பாக்கி சுடும் பிரிவில் வெண்கலம் பதக்கம் பெற்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களுக்கும், வடக்கு மண்டலஅணியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களுக்கும் எஸ்பி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் எஸ்பி  அபிநவ் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் ஆகியோர் இணைந்து கார்பன் துப்பாக்கி சுடும் பிரிவில் முதலிடம் பெற்று கேடயம் பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்