சட்டப்பேரவைத் தேர்தலில் மண்டல வாரியாக விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்தார்.
ஈரோடு தெற்கு மாவட்ட தேமுதிக பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சியின் துணை செயலாளரும், கோவை மண்டல பொறுப்பாளருமான பார்த்தசாரதி, தேமுதிக தேர்தல் பணிக்குழு செயலாளர் சந்துரு, மகளிரணி துணை செயலாளர் வனிதாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டமுடிவில் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளில் தேமுதிக போட்டியிட விரும்புகிறது. பாமகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்தபின்னர், 10-ம் தேதிக்கு மேல், எங்களுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் மண்டலவாரியாக விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார். மண்டல வாரியாக மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம், என்றார்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர்கள் கார்த்திகேயன் (மொடக்குறிச்சி), நந்தகுமார் (பெருந்துறை), லாவண்யா குமரேசன் (பவானி), மாவட்ட துணைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago