கோவை மாவட்டம் தேக்கம்பட்டி யில் இன்று(பிப்.8) தொடங்கும் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு திருச்சி, திருநள்ளாறு, கும்ப கோணம் ஆகிய இடங்களிலிருந்து 6 கோயில் யானைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் பவானி ஆற்றங்கரை யோரம் உள்ள தேக்கம்பட்டியில் யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாம் இன்று(பிப்.8) தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலின் ஆண்டாள், பிரேமி, திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலின் அகிலா, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலின் லட்சுமி ஆகிய 4 யானைகளை, ரங்கம் யாத்ரி நிவாஸ் வளாகத்திலிருந்து தனித் தனி லாரிகளில் ஏற்றி இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அர.சுதர்சன் நேற்று வழி அனுப்பி வைத்தார். முன்னதாக, யானைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி (ரங்கம்), செ.மாரியப்பன் (திருவானைக்காவல்), த.விஜய ராணி (மலைக்கோட்டை) மற்றும் கோயில் அலுவலர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண் யேஸ்வரர் கோயில் யானை பிரக்ருதியும் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில் கள்) எம்.ஆதர்ஷ் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
இதேபோல, கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமாவும், தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு நேற்று முன்தினம் இரவு லாரி மூலம் அழைத்துச் செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago