புதுக்கோட்டையில் தனியார் பேருந்து கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் ரூ.5 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் சில தனியார் பேருந் துகளில் வழக்கமாக வசூலிக் கப்பட்ட தொகையில் இருந்து கடந்த சில நாட்களாக ரூ.5 உயர்த்தி வசூலிக்கப்பட்டு வந்துள் ளது. இது குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் மாவட்டத்தின் பல்வேறு இடங் களில் தனியார் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு படுவோம் என மாவட்ட நிர்வா கம், வட்டார போக்குவரத்து அலு வலகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் ஒன்றி யச் செயலாளர் ஆர்.சொர்ணக் குமார் புகார் தெரிவித்து இருந் தார். இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் புதுக்கோட்டை யில் சில தனியார் பேருந்துகளை நேற்று நிறுத்தி சோதனை மேற் கொண்டார்.

இது குறித்து ஜெயதேவராஜ் கூறியபோது, “பேருந்து கட்ட ணத்தை அரசு உயர்த்தவில்லை. ஆனால், தனியார் பேருந்து நிர் வாகம் தன்னிச்சையாக உயர்த் தியது குறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றார்,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்