திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக 403 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தற்போது, கரோனா தொற்று அச்சம் நிலவி வருவதால், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி 1,000 வாக் காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை 2-ஆக பிரித்து புதிய வாக்குச் சாவடி மையத்தை அமைக்க ஒவ்வொரு தொகுதியிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங் களை கண்டறிந்து, அங்கு கூடுதல் வாக்குச்சாவடி மையம் அமைப்பது குறித்த பணிகள் நடந்து வருகிறது. இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என மொத்தம் 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், வாணியம்பாடி தொகுதியில் ஏற்கெனவே 256 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறித்து கூடுதலாக 118 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாணியம்பாடி தொகுதியில் மொத்தம் 374 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஆம்பூர் தொகுதி யில் 242 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன, அங்கு, தற்போது கூடுதலாக 106 மையங் கள் ஏற்படுத்தப்பட்டு தற்போது 348 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டை தொகுதியில் ஏற்கெனவே 267 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், தற்போது அங்கு கூடுதலாக 93 மையங்கள் உருவாக்கப்பட்டு மொத்தம் 360 மையங்கள் ஏற் படுத்தப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தொகுதியில் 265 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 86 மையங்கள் உருவாக்கப்பட்டு மொத்தம் 351 மையங்கள் திருப்பத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,030 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 403 வாக்குசாவடி மையங்கள் உரு வாக்கப்பட்டு மொத்தம் 1,433 மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அனைத்து விவரங்களும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, இது சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை அல்லது கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். இதற்கான இறுதி பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக் கப்படும்’’ என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago