தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக வீற்றிருக்கும் தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். வார நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். ஆனால், விடுமுறை நாட்களில் அவர்களது எண் ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துவிடும்.

அதன்படி, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால், பக்தர்களின் கூட்டம் நேற்று அலைமோதியது. ராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நுழைவு வாயில்களில் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். கட்டண தரிசன பாதையிலும் பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர். மூலவரை தொடர்ந்து, அம்மன் சன்னதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்