வெங்கட்டங்குப்பம் கிராமத்தில் என்எல்சி சார்பில் மக்கள் பயனுறு கட்டிடங்கள் திறப்பு

By செய்திப்பிரிவு

வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டங்குப்பத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், கட்டிடம்,கழிவறை மற்றும் ஆழ்குழாய் கிணறு ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் திமுக அமைச்சருமான எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திறந்து வைத்தார். என்எல்சி செயல் இயக்குநர் மோகன், சிஎஸ்ஆர் பொது மேலாளர் ராமச்சந்திரன், என்எல்சி நிதித்துறை தலைமை மேலாளர் சண்முக சுந்தரம், என்எல்சி துணைப் பொது மேலாளர்கள் மணிகண்டன், அசோக்குமார், குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்துரு, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்