திருச்சி மாநகராட்சியில் 61 முதல் 65-வது வரையிலான வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இன்று(பிப்.7) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணை யர் சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாநக ராட்சியில் 61 முதல் 65-வது வரையி லான வார்டுக்குட்பட்ட காட்டூர், திரு வெறும்பூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அரியமங்கலம் அருகே திருவெறும்பூர் உந்து நிலையத்திலிருந்து செல்லும் நீர் உந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, திருவெறும்பூர் ஒன்றிய காலனி, வள்ளுவர் நகர், கைலாஷ் நகர், விக்னேஷ் நகர், வைத்திலிங்கம் நகர், கணேஷ் நகர், மஞ்சத்திடல், சக்தி நகர், பாலாஜி நகர், கொக்கரசம் பேட்டை, எல்லக்குடி, ஆத்தூர், கே.கே.கோட்டை அக்ரஹாரம், காவேரி நகர், காந்தி நகர், பாத்திமா புரம், முருகன் கோயில் தெரு, அழகு மாரியம்மன் கோயில் தெரு, பர்மா காலனி, வேணுகோபால் நகர், பாரதிதாசன் நகர், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு இன்று (பிப்.7) குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago