வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.எஸ்.கணேசன் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மறியல் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க பொருளாளர் பெருமாள் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டியில் நடந்த மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீஸார் கைது செய்தனர். கயத்தாறு, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், வைகுண்டம் என, மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago