பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. அதன்படி, முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப் பட்டது. மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், வருவாய்த் துறை யினர், காவல் துறையினருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் வேலூர் மாவட்டத்துக்கு ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 37,500 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வரப்பெற் றுள்ளது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் பொது மக்களிடம் கரோனா தடுப்பூசி தொடர்பாக நிலவும் அச்சம், சந்தேகத்தை போக்கவே நான் தடுப்பூசி போட் டுக்கொண்டேன். தடுப்பூசியால் பக்கவிளைவு இருப்பதாக கூறுவது தவறு. இதுவரை யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வேலூரில் உள்ள சிஎம்சி மற்றும் நாராயணி ஆகிய இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக போட அனுமதி அளிக்கப்பட்டுள் ளது’’ என்றார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி பணியாளர்கள், வருவாய்த் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 1,600 காவல் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வந்து சென்ற பிறகு காவல் துறையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்