திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஆண் டும் ஒதுக்கப்படும் ரூ.1,000 கோடி நிதியை முறையாக பயன்படுத்தாத காரணத்தால் மக் களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என அண்ணா துரை எம்பி குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை வகித்தார். ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மத்திய -மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நடைபெறும் திட்டப் பணிகளில் அதிகளவில் ஊழல் நடைபெறுவதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியபோது, திட்ட இயக்குநர் ஜெயசுதா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் னர், ஆட்சியர் தலையிட்டு நிலை மையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
கூட்டத்துக்கு பிறகு அண்ணா துரை எம்பி கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத் துக்கு வளர்ச்சி நிதியாக கடந்த 3 ஆண்டுகளில், தலா ரூ.1,000 கோடி என மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி வரப்பெற்றுள்ளது. அந்த நிதியை முறையாக பயன்படுத்தி இருந்தால், மாவட்டத்தில் அனைத்து அடிப்படை பணிகளும் நிறைவு பெற்றிருக்கும். ஆனால், பல இடங்களில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் வாழ்கின்றனர். இதற்கு காரணமாக, நிதியை பயன்படுத்துவதில் நடைபெற்ற முறைகேடுகளால், பணிகள் நிறைவு பெறவில்லை. இது குறித்து புதிய ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், விவசாயிகளுக்கு நிவாரணம் நிதி வழங்கியதில் முறைகேடு, தாட்கோ மற்றும் வேளாண் பொறியியல் துறையில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப் பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம்தான் மக்கள் குறைகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகளை அதிகாரிகள் மதிப்பது இல்லை. எனவே, மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி களுடன் ஆலோசித்து அரசின் திட்ட பணிகளை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் போல, புயல் நிவாரணத் தொகையை வழங்கியதிலும் முறைகேடு நடை பெற்றுள்ளது.
நிலம் இல்லாதவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. உண்மையாக பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago