ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சத்தில் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 360 வீடுகளுக்கு ரூ.30 லட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கப்படுகிறது. இந்தப் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 42 இருளர் சமூக மக்களுக்கு பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூர்த்தி, ஹரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago