ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள லட்சுமிபுரத்தில் வசிக்கும் செல்வம் என்பவரது வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் நேற்று வெடித்து விபத்துக்குள்ளானது.
அருகாமையில் உள்ள சேகர் மற்றும் லட்சுமி என்பவரது வீடுகளுக்கும் தீ பரவி அங்கிருந்த சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. சித்தோடு தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டிலிருந்தவர்கள் வேலைக்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மூன்று வீடுகளிலும் இருந்த தங்க நகைகள், பத்திரங்கள், சமையல் உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago