பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெற வேண்டும்.
27 சதவீத கலால் வரியையும், பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள செஸ் வரி ரூ.2, ரூ.4 ஆகியவற்றையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொதுச் செயலாளர் மணிகண்டன், பொறுப்பாளர் ஜெயபால், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத், மாவட்டப் பொருளாளர் அன்புசெல்வம், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூரில்...
திருவாரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் நேற்று வாயில் கருப்பு துணியைக் கட்டி மவுனப் போராட்டம் நடத்தினர்.திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.நபி தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் இரா.மாலதி மாவட்ட துணைத் தலைவர் பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago