கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெறும் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு திருச்சியிலிருந்து 4 யானைகள் நாளை (பிப்.7) காலை 6 மணிக்கு திருப்பராய்த்துறையிலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளன.
கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் பிப்.8-ம் தேதி முதல் 48 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த முகாமுக்கு இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள ரங்கம் ரங்கநாதர் கோயில் யானைகள் ஆண்டாள், பிரேமி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் யானை அகிலா ஆகிய 4 யானைகள், திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயிலிலிருந்து நாளை (பிப்.7) காலை 6 மணிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த யானைகளுடன் கால் நடை மருத்துவக் குழுவினரும் செல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago