திருச்சி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அ.மேகலாவிடம், அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு கலைக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அரசாணை 146-ன்படி, 6 மாதங்கள் 3 நாட்கள் பணியாற்றியிருந்தாலே ஓராண்டு பணி அனுபவமாகக் கணக்கிடப்பட்டது.
ஆனால், 2015-க்கு முன் 9, 8, 7 மாதங்கள் என்று ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்றிய எங்களுக்கு, நாங்கள் பணியாற்றிய காலம் மட்டுமே பணி அனுபவமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
2015-க்குப் பிறகு அரசாணை 129-ன்படி 10 மாதங்கள் பணியாற்றியிருந்தால் ஓராண்டாக பணி அனுபவம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான சிறப்புத் தேர்வில், உறுப்புக் கல்லூரிகளாக இருந்து கடந்தாண்டில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரிகளில் பணியாற்றியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவுள்ளதாக தெரிய வருகிறது.
இந்தச் சிறப்புத் தேர்வில் தனியார் கல்லூரி பணி அனுபவம், உறுப்புக் கல்லூரி பணி அனுபவம், பிடிஏ பணி அனுபவம் ஆகியவற்றையும் கணக்கிடுவதால், உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி நியமன வாய்ப்பு சாத்தியப்படுவதுடன், 15 ஆண்டுளுக்கும் மேலாக அரசுக் கல்லூரிகளில் பாடம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பெரிய பாதிப்பு நேரிடும்.
எனவே, அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தை அரசாணைகள் 146, 129 ஆகியவற்றை பின்பற்றி கணக்கீடு செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago