திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய விசாரணையில், எடமலைப்பட்டி புதூர் சின்ன கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி அலமேலு(45), ராம்ஜிநகர் மில்காலனியைச் சேர்ந்த பாஸ்கர்(60), நவநீதகிருஷ்ணன் மகன் ஜெய்(எ) ஜானகிராமன்(42) ஆகியோரை எடமலைப்பட்டி புதூர் போலீஸாரும், தென்னூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லப்பன் (எ) காசிலிங்கம் (44) என்பவரை தில்லைநகர் போலீஸாரும் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago