திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையைச் சேர்ந்த க.உலகநாதன்(35), அண்மையில் விக்னேஷ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். உலகநாதன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கே.கே. நகர் போலீஸார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், உலகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago