முன் விரோதம் காரணமாக வீட்டுக்கு தீ வைத்து சிறுமியை எரித்துக் கொல்ல முயன்ற இளைஞர் கைது செய்யப் பட்டார்.
செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் தனது 2 குழந்தைகளுடன், தனது தந்தை வீட்டில் வசிக்கிறார். இதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(23), சந்தியாவின் தந்தைக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியாவின் வீட்டுக்குள் புகுந்த முத்துக்குமார், வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து தீ வைத்து சேதப்படுத்தியுள்ளார்.
மேலும், பீரோவில் இருந்த 20 கிராம் நகையை திருடியுள்ளார். அந்த நேரத்தில் சந்தியாவின் 8 வயது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். சிறுமியின் வாயைப் பொத்தி, கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். இதனால், சிறுமி மயக்கமடைந்தார். சிறுமி மீது தீப்பற்றியது.
சிறுமி கூச்சலிட்டுள்ளார். திருடிய நகைகளுடன் முத்துக்குமார் தப்பிச் சென்றுவிட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
படுகாயமடைந்த சிறுமி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிறுமியின் தாயார் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஹரிகரன் விசாரணை நடத்தி, குற்றச்செயலில் ஈடுபட அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, பொருட்களை தீ வைத்து எரித்தது, சிறுமியைக் கொல்ல முயன்றது, கொள்ளையடித்தல் போன்ற பிரிவுகளிலும், சிறுமியின் மீதான வன்கொடுமையில் ஈடுபட்டதால் போக்ஸோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago