8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சேத்துப்பட்டு அருகே விவசாய நிலத்தில் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடைபெற்றது.
சென்னை – சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலையை அமைக்க மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டியது. இதற்கு, எதிர்ப்புத் தெரி வித்து, 5 மாவட்ட விவசாயிகள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 8 வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. அதன் அடிப்படையில், 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 8 வழிச்சாலைத் திட்டத்தை, இந்தாண்டு நிறைவேற்றுவோம் என நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் சீதாராமன் தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, திருவண் ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கிராமத்தில் கருப்புக் கொடி போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் கருப்புக் கொடி போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் முதல்வர் பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தீவிரமாக உள்ளனர். விவசாய நிலங் களை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 8 வழிச்சாலைத் திட்டம் தேவை யில்லை. இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். வன விலங்குகளும் பாதிக்கப்படும்.
எனவே, 8 வழிச்சாலைத் திட் டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், விவ சாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்” என்றனர். பின்னர் அவர்கள், மத்திய-மாநில அரசு களை கண்டித்து முழக்கமிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago