திருப்பத்தூரில் இருந்து வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற செயற்கை மணலை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை, நத்தம், சுந்தரம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செயற்கை மணல் தயாரிப்பு அதிகமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகனுக்கு, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.
அதன்பேரில், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் தலை மையிலான வருவாய்த் துறை யினர் காக்கங்கரை, நத்தம், சொப்பாலம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சொப்பாலம்பட்டி பகுதியில் இருந்து வெளி மாநிலத்துக்கு லாரிகளில் கடத்த தயாராக இருந்த 12 யூனிட் செயற்கை மணலை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்த செயற்கை மணலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்ற வருவாய்த் துறையினர், மணல் கடத்தல் நபர்கள் குறித்து கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago