விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 2,197 பேருக்கு கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 2,197 முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திற் குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1.257 பேருக்கும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 649 பேருக்கும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 291 பேருக் கும் என நேற்று முன்தினம் வரை 2,197 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆட்சி யர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் மற்றும் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முகக்கனி, துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து முன்களப் பணியா ளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. போது மான அளவில் தடுப்பூசி இருப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்