சாலையோர வணிகர்களுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி திட்டத்தில் (ஸ்வநிதி) கடன் வழங்க வங்கிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகளின் மேம்பாட்டிற்காக கடந்த ஜூலை மாதம் பிரதமரின் தற்சார்பு நிதி (ஸ்வநிதி) திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை மீண்டும் தொடங்குவதற்காக பணி மூலதனக் கடனாக ரூ.10 ஆயிரம், ஓராண்டு காலக் கடனாக பிணை ஏதுமின்றி வழங்கப்படுகிறது. கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு, வட்டி மானியம் ஆண்டொன்றுக்கு 7 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1,200 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இதற்காக 24 சதவீத ஆண்டு வட்டி வசூலிக்கப் படுகிறது. ரூ.10 ஆயிரம் கடனாகப் பெற்றால், கடனுக்கான வட்டிச் சுமையில் மொத்தத்தில் 30 சதவீதம் குறையும் வகையில் வட்டி மானியம் அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 650 சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களது விண்ணப்பங்களை பரிசீலித்த நகராட்சி நிர்வாகம் அவைகளை வங்கிகளுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையின் பேரில் வங்கிகளுக்குச் சென்ற சாலையோர வியாபாரிகளை, வங்கி நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறது. கடன் வழங்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்புவதாகவும் பாதிக்கப் பட்டோர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரனிடம் கேட்டபோது, "கள்ளக்குறிச்சி நகராட்சியில் இதுவரை 215 சாலையோர வியாபாரிகள் இக்கடன் பெற்றுள்ளனர்.
மேலும் பயனாளிகள் எண் ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி பயனாளிகளின் எண் ணிக்கை அதிகரிக்க ஆயத்தமாகி வருகிறோம்.
கடனுதவி வழங்க வங்கிகள் மறுப்பதாக புகார்கள் எழுந் துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் இதர வங்கிகளின் மேலா ளர்களை அழைத்து கலந்தாய்வு நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago