விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் 5,360 ஹெக்டேரில் நெல், 3,113 ஹெக்டேரில் சிறுதானியங்கள், 2,107 ஹெக்டேர் பருப்பு வகைகள், 975 ஹெக்டேர் எண்ணெய் வித்து பயிர்கள் உட்பட மொத்தம் 11,557 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி, ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் எண்ணெய் வித்து வளர்ச்சி இயக்குநர் மனோகரன் ஆகியோர் அருப்புக்கோட்டை அருகே உள்ள செங்குளம், கீழ்குடி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட கிராமங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது வி.நாங்கூர், துலுக்கன்குளம், அள்ளிக்குளம், அலபேரி, கீழ்குடி, கல்யாண சுந்தரபுரம், பரளச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல், சிறு தானியம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்து, வெங்காயம், மிளகாய் பயிர்கள் சேதம் குறித்து விவசாயிகள் முறையிட்டனர். இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது ஆட்சியர் இரா.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago