ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், மாடுகள் விற்பனை சரிவடைந்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமைதோறும் மாட்டுச் சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள், சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்படும். இந்த மாடுகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று கூடிய மாட்டுச் சந்தையில 500 பசுக்கள், 250 எருமைகள், 100 வளர்ப்புக்கன்றுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. இதில், பசு மாடு ரூ.30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன.
நேற்றைய சந்தையில் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருந்ததால், 70 சதவீத மாடுகளே விற்பனையானதாக மாட்டுச்சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago