ராசிபுரம் அருகே முன்னாள் எம்பியின் மஞ்சள் கிடங்கு எரிந்து சேதம்

By செய்திப்பிரிவு

ராசிபுரம் அருகே முன்னாள் எம்பிக்கு சொந்தமான மஞ்சள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து சேதமானது.

ராசிபுரத்தை அடுத்துள்ள முத்துக்காளிப்பட்டியில் முன்னாள் அதிமுக எம்பி சுந்தரத்திற்குச் சொந்தமான மஞ்சள் கிடங்கு உள்ளது. மஞ்சளை வாங்கி இந்த கிடங்கில் இருப்பு வைத்து, நாமகிரிப்பேட்டை மற்றும் ஈரோடு மஞ்சள் சந்தையில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்ட 10 டன் மஞ்சளை, தரம்வாரியாக பிரித்து, அடுக்கி வைத்துள்ளனர். நேற்று அதிகாலை கிடங்கில் இருந்து கரும்புகை வெளியானதையடுத்து, அருகில் இருந்தோர், கிடங்கு உரிமையாளரான முன்னாள் எம்பி சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராத நிலையில், நாமக்கல், சேலம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ரூ 9 கோடி மதிப்பிலான மஞ்சள் சேதமானதாக கூறப்படுகிறது.

தீ விபத்து நடந்த இடத்தை ஆட்சியர் மெகராஜ், எஸ்பி சக்திவேல் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். விபத்துக்கு மின்கசிவு காரணமா அல்லது நாசவேலை காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்