புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை வட்டம் கொடும்பாளூர் அருகே உள்ள பூலாங்குளத்தைச் சேர்ந்த வர் சி.திருநாவுக்கரசு(50).இவர், ஒரு சிறுமிக்கு கடந்த 2019-ல் பாலியல் தொல்லை கொடுத்ததாக விராலிமலை காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்த திருநாவுக்கரசு, வீட்டில் இருந்து விசாரணைக்கு ஆஜராகி வந்தார்.
இந்நிலையில், நேற்று விசார ணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய திருநாவுக்கரசிடம் நாளை (இன்று) தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சிறை தண்டனை கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், அவரை பிடிக்க மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில், பரம்பூரில் உள்ள பெருமாள்பட்டி ஊருணி கரையில் விஷம் குடித்து திருநாவுக்கரசு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அன்னவாசல் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago