மத்திய மண்டலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 860 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று 3-வது நாளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பிரச்சாரச் செயலாளர் கா.பால்பாண்டி தலைமை வகித் தார்.
போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன், மாவட்டத் தலைவர் என்.பி.விவே கானந்தன், மாவட்டச் செயலாளர் பி.பழனிசாமி உட்பட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 3-வது நாளாக நேற்று நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜபருல்லா உட்பட 59 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சாலை மறியல் செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் அண்ணாசிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 84 பெண்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 13 பெண்கள் உட்பட 47 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் ரயிலடி அருகே நேற்று சாலை மறியல் போராட் டத்தையொட்டி நடைபெற்ற பேரணியை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.
அரசு ஊழியர்கள் சங்க மாநிலச் செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் உட்பட சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் தலைமையில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 60 பெண்கள் உட்பட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இளவரசன் தலைமையில் மறி யலில் ஈடுபட்ட 16 பெண்கள் உட்பட 40 பேரை போலீஸார் கைது செய்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வெ.சோமசுந்தரம் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 31 பெண்கள் உட்பட 99 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago