தி.மலை எஸ்பிக்கு கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை ஆட்சியரை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேற்று கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணி யாளர்களுக்கு கடந்த 16-ம் தேதி முதல் ‘கரோனா தடுப்பூசி’ போடப்படுகிறது. தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்களப் பணியாளர்கள் தொடக்கத்தில் தயக்கம் காட்டினர்.

பின்னர் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது.

இந்நிலையில் உயர் பொறுப் பில் உள்ள அதிகாரி களும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, வருவாய்த் துறை சார்பில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கரோனா தடுப்பூசியை நேற்று முன்தினம் போட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, காவல் துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேற்று கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்