வேலூர் மாநகராட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.26.61 கோடியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில், ரூ.26.61 கோடியில் கட்டப்பட்ட 288 அடுக்கு மாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் பழனி சாமி நேற்று திறந்து வைத்தார்.

வேலூர் மாநகராட்சியில் குடிசை பகுதிகளற்ற நகர திட்டத்தின் கீழ் கன்னிகாபுரம் பகுதியில் ரூ.20.89 கோடியில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகள், டோபிகானா பகுதியில் ரூ.5.72 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்பு களை தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

வேலூரில் கன்னிகாபுரம் குடியிருப்புப் பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் பங்கேற்று தேர்வு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.

அப்போது, குடிசை மாற்று வாரிய வேலூர் கோட்ட நிர்வாக பொறி யாளர் அசோகன், உதவி நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன், உதவிப் பொறியாளர்கள் பிரவீனா, கவிதா, வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுரடி பரப்பளவு கொண்டது. ஒரு பல்நோக்கு அறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதியுடன் இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வசதியுடன் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளன. இதில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பங்களிப்புத் தொகை ரூ.1.82 லட்சம் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்