போதுமான அளவு கரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது கடலூர் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்களப் பணியாளர் களக்கு கரோனா தடுப்பூசி போடுவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங் கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று நடை பெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி கூறியது:

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு சாரா சுகாதாரப்பணியாளர்கள் இதுவரை 8,918 நபர்கள் கரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 16-ம் தேதி முதல்கடலூர் அரசு தலைமை மருத்து வமனை,சிதம்பரம் ராஜா முத் தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை,விருத்தாசலம் அரசு மருத்துவமனை, நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனை, கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை ஆகிய மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

போதுமான தடுப்பூசி கையி ருப்பில் உள்ளது. இதனை அனைத்து ஊழியர்களும் பயன் படுத்தி தடுப்பூசியினை தவறாது போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன், சார் ஆட்சியர்கள் சிதம்பரம் மதுபாலன், விருத்தாசலம் பிரவின்குமார், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) ரமேஷ்பாபு,துணை இயக்குநர்(சுகாதா ரப்பணிகள்) செந்தில் குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ் வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்