கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க தலைமையாசிரியர்களுடன் கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சியில் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர் கலந்தாய்வு நடத்தினார்.

கரோனா பொதுமுடக்கத்திற்குப் பின் கடந்த மாதம் முதல் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வரும் 8-ம் தேதி முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப் படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் நேற்று கலந்தாய்வு நடத்தினார். 72 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது பொதுத்தேர்வில் மாணவர்களை எப்படி எதிர்கொள்ளச் செய்வது, அவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தொடர்ந்து உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட களமருதூர், கிளியூர் மற்றும் எம்.குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளை ஆய்வு செய்தார். பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக கணினி வழியே நடைபெறும் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதை பாராட்டினார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் அனைத்து அரசு பொதுத் தேர்வுகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனைகளையும் ,அறிவுரைகளையும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்