ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருடிய பெண் கைது

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூரைச் சேர்ந்தவர் நாகராஜ்(45). இவர், தேனி பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஜனவரி 25-ம் தேதி பெரியகுளம் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்றார். ரூ.50 ஆயிரத்தை டெபாசிட் செய்தபோது, ரூ.500 மட்டும் வெளியே வந்தது.

எனவே, ரூ.49,500 மட்டும் கணக்கில் செலுத்தினார். ஆனால் இயந்திரத்தில் பணப் பரிவர்த்தனை முடியும் முன்பே ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

அப்போது அருகில் இருந்த பெண், பணம் டெபாசிட் செய்யப்படுவதை நிறுத்தி, ரூ.49,500-ஐ திருடிச் சென்றார்.

பணம் தனது கணக்கில் வரவு வைக்கப்படாதது குறித்து தேனி நகர் காவல்நிலையத்தில் நாகராஜ் புகார் தெரிவித்தார். ஏடிஎம் மைய கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் பணத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

விசாரணையில், பணத்தைத் திருடியது ஆண்டிபட்டி கொண் டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் மனைவி மணிமேகலை(23) என்பது தெரி யவந்தது.

அவரை போலீஸார் கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

கணவரைப் பிரிந்து குழந் தையுடன் தனியே வசித்து வரும் மணிமேகலை, இளங்கலை பட் டதாரி ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்