ஈரோடு மாவட்டத்தில் இரு தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா தடுப்பூசி, முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 13 ஆயிரத்து 800 பேருக்கு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.
முதல்கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது காவல்துறை உள்ளிட்ட முன்களப் பணியாளர்களாகச் செயல்பட்ட பிற துறையைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், ஈரோடு சுதா மருத்துவமனை மற்றும் லோட்டஸ் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago