புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு வெளியே சாலையோரமாக சிலர் கடை வைத்து காய் கனிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களது கடைகளால் உழவர் சந்தைக்குள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தக் கடைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உழவர் சந்தை வியாபாரிகள் நேற்று அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் வணிக அலுவலர்கள் சமாதானம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்துபோகச் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago