நாட்டில் தேசியக் கொடி, சூரியன் உதித்த பிறகு ஏற்றப்பட்டு, மறைவதற்குள் கீழிறக்கப்பட வேண்டும். இதன்படி, மத்திய- மாநில அரசு அலுவலகங்களில் மாலை 6 மணிக்கு தேசியக் கொடி இறக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், குறிப்பிட்ட சில இடங்களில் 24 மணி நேரமும் தேசியக் கொடியை பறக்கவிட மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் விமானநிலையம், தனியார் கல்லூரி ஆகியவற்றை தொடர்ந்து, 3-வது இடமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் தேசியக் கொடியைப் பறக்கவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, ரயில் நிலைய வளாகம் முன் உள்ள பூங்கா பகுதியில் 100 அடி உயரம் உள்ள கம்பத்தில் நேற்று தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. 30-க்கு 20 அடி அளவிலான தேசியக் கொடியை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய மேலாளர் கே.விருத்தாசலம், மின் பொத்தானை அழுத்தி ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சி.தேவேந்திரன் மற்றும் ரயில்வே அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago