மேலப்பாளையத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமனை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். சாகுல் அமீது தொடங்கி வைத்தார். மமக மாவட்ட தலைவர் கே.எஸ். ரசூல்மைதீன், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் எஸ்எஸ்ஏ கனி, மஜ்லீஸீல் உலமா தலைவர் முஹம்மது இல்யாஸ், மதிமுக மாவட்டச் செயலாளர் நிஜாம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் ஜெ.முஹம்மது அலி உள்ளிட்டோர் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago