கடலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாக மூரி தலைமையில் உணவுப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொது விநியோகத் திட்ட ஒதுக்கீடு, நகர்வு, நுகர்வு மற்றும் புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:
மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
இக்கூட்டத்தில் பேசிய கடலூர் ஆட்சியர், “தொலைபேசி வாயிலாக பொது மக்கள் புகார் தெரிவிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டும், இதுவரையில புகார்கள் வரவில்லை, இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பொது விநியோக அங்காடியின் வாசலில் புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண்ணை ஒட்டி வைக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் 1,420 நியாய விலைக்கடைகள்,720 நகரும் நியாயவிலைக்கடைகள் உள்ளன. 7 லட்சத்து35 ஆயிரத்து 545 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக உணவு பொருட்கள் வழங்கப்படும் செயல்பாட்டினை தொடர்புடைய அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் தீவிர கண்காணிப்புடன் கள சோதனைகள் மேற்கொள்ள வேண்டும், உணவுப் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்கப்படுவது மற்றும் வீட்டு உபயோக எரிவாயு வெளிச்சந்தையில் விற்கப்படுவதை முற்றிலும் தடுத்திட வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கள சோதனைகளில் ஈடுபடும். அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன்,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார்,மாவட்ட வழங்கல் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தீவிர கண்காணிப்புடன் கள சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago