மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு இதுவரை ‘லே அவுட்’ தயாராகவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நி லையில் இதற்கான திட்ட மதிப்பீடு, சில வாரங்களுக்கு முன்பு ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.2,000 கோடியாக உயர்த் தப்பட்டது.
மருத்துவமனை கட்டுமானத்துக்காக 85 சதவீத நிதியை ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் கடனாக வழங்க உள்ளது. இந்த நிறுவனக் குழுவினர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஆய்வு செய்து ஒன்றரை ஆண் டுகளாகிவிட்டன.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத் துவமனை குறித்து இரா.பாண் டிராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
திட்ட மதிப்பீடு ஒதுக்கீடு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து 12 கேள்விகள் கேட்டிருந்தேன். அதில் பல கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்கவில்லை.
ஜைக்கா நிறுவனம் இந்தத் திட்டத்துக்கு 85 சதவீதம் கடன் வழங்க உள்ளது. மீதி 15 சதவீதம் வழங்குவது மத்திய அரசா, மாநில அரசா? என்று கேட்டிருந்தேன். அதற்கு மத்திய அரசுதான் வழங்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.
திட்ட மதிப்பீட்டை யார் அதி கரித்தார்கள் என்ற கேள்விக்கு, ‘ஜைக்கா’வால் தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது என்று பதில் அளித்தனர். ஆனால், திட்ட மதிப் பீடு உயர்த்தப்பட்ட நாள் குறித்து தகவல் அளிக்கவில்லை.
அதேபோல் எய்ம்ஸ் மருத்துவ மனையின் விரிவான திட்ட விவரங்கள், லே-அவுட் ப்ளான் குறித்துக் கேட்டதற்கு தகவல் இல்லை என்று பதில் அளித் துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago