வரத்து குறைவால் ஈரோட்டில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு காய்கறிச்சந்தைக்கு கர்நாடக மாநிலம் மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சேலம், பவானி, திருச்செங்கோடு பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சராசரியாக, நாளொன்றுக்கு 50 டன் வெங்காயம் வரத்து இருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக வரத்து 20 டன்னாக குறைந்துள்ளது. இதனால்,வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் ஈரோடு சந்தைக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் அதிக அளவில் வரத்தாகிறது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. தொடர் மழையும், வட மாநில வரத்து குறைவும் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக விலை குறைந்து, கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது. தற்போது வரத்து குறைவால் கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago