திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் 64 வயதுடைய பெண் ஒருவருக்கு அதி நவீன பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனைக்கு 64 வயதுடைய பெண் ஒருவர் அண்மையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமும், மயக்கமும் இருந்தது. அவரை பரிசோதித்த போது அவருடைய இதயம் பலவீனமாகவும், இதயத்தின் மேல் அறைகளில் மின்னூட்ட தொடர்புகள் சரியான நிலையில் இல்லை என்பதும் தெரியவந்தது.
மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு, வழக்கமாக பொருத்தப்படும் பேஸ்மேக்கர் ஏற்கெனவே பலவீனமான அவரது இருதயத்தை மேலும் பலவீனமாக்கி விடும் என்பதால், பிரத்யேக தொழில்நுட்பத்தின் மூலம் அதிநவீன பேஸ்மேக்கர் கரு வியை உருவாக்கி அவருக்கு பொருத்தினர்.
தமிழகத்தில் இதுபோன்ற ஒரு பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சை முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட மின்னணுவியல் சிகிச்சை கூடத்தின் உதவி இல்லாமலேயே பல நோயாளிகளுக்கு இதுபோன்ற சிறப்பு வாய்ந்த பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சையை தமிழகத்தில் உள்ள மற்ற மையங்களில் எளிதாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago