திருச்சி அருகே மனநலம் பாதித்தவரை அடித்துக் கொலை செய்த தந்தை, மகன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி காட்டூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பார்த்திபன் (46). சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 29-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த குமார் (49) என்பவரின் மகளிடம் செல்போன் எண்ணைக் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக எழுந்த தகராறில் குமார், அவரது மகன் விக்னேஷ்(20), நண்பர் சிவராமன் (20) ஆகியோர் பார்த்திபனை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குமார், விக்னேஷ், சிவராமன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago