திசையன்விளை சுற்றுவட்டார குளங்களுக்கு மணிமுத்தாறு அணை நீரை வழங்க அரசாணை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களுக்கு, மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் வழங்க சிறப்பு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அரசு முதன்மைச் செயலாளர் க.மணி வாசன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து, மணிமுத்தாறு பிரதான கால்வாயின் கீழ், ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட 1 முதல் 4 வது ரீச் முடிய உள்ள முறைப்படுத்தப்பட்ட குளங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கியதுபோக, மீதமுள்ள தண்ணீரை 4-வது ரீச்சிலுள்ள 10-வது மடை வழியாக திசையன்விளை, ராதாபுரம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள சுவிசேஷபுரம் குளம், புதுக்குளம், கல்குளம், நந்தன்குளம், செங்குளம், முதலாளிகுளம், குருவிசுட்டான்குளம், அப்புவிளைகுளம், எருமைகுளம், அவிச்சான்குளம், இலகுளம், கடகுளம் ஆகிய குளங்களுக்கும், ஆயங்குளம் மற்றும் ஆணைக்குடி படுகைகளுக்கும் விநாடிக்கு 50 கனஅடிவீதம் 3.2.2021 (இன்று) முதல் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்