தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.குமாரசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, மின்சார ஊழியர் ஓய்வூதியர் நல அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் ராஜாமணி, அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் பேசினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் செ.கருணாகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியறுத்தி மாவட்டச் செயலாளர் இல.ராமமூர்த்தி பேசினார். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்கள் பி.அல்போன்ஸ் லிகோரி, ம.சாந்தகுமார், இணைச் செயலாளர் மி.டெரன்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தென்காசி
தென்காசி ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற தர்ணாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சலீம் முகம்மது மீரான் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் அருணாசலம் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி நாயனார், மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் பேசினர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago